உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி கோவில் திருப்பணி துவக்கம்!

புதுச்சேரி கோவில் திருப்பணி துவக்கம்!

புதுச்சேரி: குயவர்பாளையம், ஜெயங்கொண்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணி துவங்கியது.

குயவர்பாளையம், லெனின் வீதி பிரதான சாலையில் செல்வ விநாயகர், ஜெயங்கொண்ட மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 22 ஆண்டுகள் ஆனதால், கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைத்தும், கோவிலை புதுப்பித்தும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விமான கோபுரங்களுக்கு பாலஸ்தாபன பூஜை நேற்று நடந்தது. பூஜையில் நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் பங்கேற்று, திருப்பணியை துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக்குழு மற்றும் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !