பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்!
ADDED :4015 days ago
புதுச்சேரி: பெரிய முதலியார்சாவடி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி அடுத்த பெரிய முதலியார்சாவடி திவான் கந்தப்பா நகரில் பால முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால பூஜை, கடம் புறப்பாடு நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு, காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஆரோவில், பெரிய முதலியார்சாவடி, சின்னமுதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.