சாணார்பட்டி கும்பாபிஷேகம்!
ADDED :4007 days ago
சாணார்பட்டி : கணவாய்ப்பட்டி ஊராட்சி சக்கிலியன்கொடையில் அமைந்துள்ள மதுரைவீரன்சுவாமி, வேட்டைக்காரன் சுவாமி, பகவதியம்மன், காளியம்மன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு விக்னேஸ்வரபூஜை, வாஸ்து சாந்தி, முதலாம்காலயாக பூஜை நடந்தன. இரண்டாம் கால பூஜைக்கு பின், கும்பாபிஷேகம் அன்று கடம் புறப்பாடாகி, கோபுரகலசங்களில் புண்ணிய தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட, தீர்த்ததால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரகாஷ் சிவாச்சாரி அபிஷேகம் செய்தார்.