உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரிமங்கலம் கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி

காரிமங்கலம் கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி

காரிமங்கலம்: காரிமங்கலம், கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை இன்று (பிப்.,12) நடக்கிறது. காரிமங்கலம் கடைவீதியில் அமைந்துள்ள கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, சிறப்பு ஹோமம், கால பைரவருக்கு சிறப்பு அலங்கார, அபிஷேகம் நடக்கிறது.

* தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை, தட்சண காசி காலபைரவர் கோவிலில், காலை, 6 மணி முதல், 9 மணி வரை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், குபேரே ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், அஷ்ட பைரவர் ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, 1,008 அர்ச்சனை, மங்கள ஆரத்தியும், இரவு, 10 மணி முதல், 12 மணி வரை சத்ரு சம்ஹார பூஜை, 1,008 கிலோ மிளகாய் ஹோமம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !