கடம்பத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3970 days ago
கடம்பத்தூர்: கடம்பத்தூர், கடம்பவன முருகன் கோவில், மகா கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. கடம்பத்தூர் அடுத்த, ஸ்ரீதேவிக்குப்பம் லட்சுமி நகரில், புதிதாக கட்டப்பட்ட, கடம்பவன முருகன் கோவிலில், நேற்று காலை, மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கடந்த 9ம் தேதி காலை, விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமமும், தீபாராதனையும் நடந்தது. பின், நேற்று முன்தினம் காலை, வேத பாராயணமும், கரிகோலமும் நடந்தது. தொடர்ந்து மாலை, பூர்ணாஹூதியும், அஷ்டபந்தனமும், பிம்ப பிரதிஷ்டையும் நடந்தது. அதன்பின், நேற்று காலை 10:00 மணிக்கு, கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.