பிரசவம் சுகமாக!
ADDED :3949 days ago
ஹே, சங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹரத்ரிசூலின்
சம்போஸுகப்ரஸவ க்ருத் பவ மே தயாளோ
ஸ்ரீமாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே
மாத்ரு பூதேச்வரோ தேவோ
பக்தானா மிஷ்டதாயக;
ஸுகந்தி குந்தலா நாவ;
ஸுக ப்ரஸவ ம்ருச்சது.
ஆணல்லன்; பெண்ணல்லன்; அல்லால் அலியுமல்லன் என்று இறைவனின் பரம்பொருள். தன்மையை பெரியவர்கள் பாடுபவார்கள். அந்தப் பரமன் அன்பருக்கு எளியவன். தாயினும் சாலப் பரிந்து உதவும் அவன். தாயுமாகி ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தான். அந்தப் பரமனின் கருணையை வேண்டிச் செய்யும் பிரார்த்தனை இது. இந்த துதியை தினமும் பத்துமுறை, பிரசவ காலம் முழுதும் சொல்ல வேண்டும். இதனால் நல்லபடியாக குழந்தை பிறக்கும்; தாய் சேய் நலமுடன் விளங்குவார்கள்.