உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாட்டு பாடினால் பாரம் குறையும்

பாட்டு பாடினால் பாரம் குறையும்

இறைவனை அடைய எளிய வழி பக்தி செலுத்துதல் ஆகும். பக்திக்கு உகந்ததாக பஜனை அமைந்துள்ளது. பஜனையில் மனம் ஒருமுகப்படும். சிந்தனை பக்தியில் திளைக்கும். மன சஞ்சலம் நீங்கும். பாவம் அகன்று தெய்வவாழ்வு பெறலாம். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், பன்னிரு ஆழ்வார்கள், பக்தமீரா, தியாகராஜர் போன்ற பெரியோர்கள் பக்திப்பெருக்கில் பாடியே இறைவனை அடைந்தனர். இசையால் வசமாகாத இதயம் ஏதுமில்லை. இறைவனே இசை வடிவமாக இருக்கிறார். பஜனையில் உள்ளம் ஒன்றி பாடும் போது உருக்கத்தால் கண்ணீர் பெருகி விடும். அதனால் தான் மாணிக்கவாசகர் அழுதால் உன்னைப் பெறலாமே என்று குறிப்பிடுகிறார். பஜனையில் பாடுவதால் மனபாரம் (டென்ஷன்) குறைவது கண்கூடு. ஆதலால் பாட்டு பாடுங்கள்; மனபாரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !