பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3924 days ago
பவானி:பவானி, அம்மாபேட்டை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை காவிரி கரை காட்டையராஜா நகரில் உள்ள நிஷ்டையில் உறையும் பெருமாள், அமுத கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீலஷ்மண சமேத கோதண்டராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடந்தது.பாலாலயத்துடன், திருப்பணிகள் முடிந்து, கடந்த, 9ம் தேதி முதல் கால யாக பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. 11ம் தேதி விஸ்ரூபதரிசனம், நான்காம் கால வேள்வி முடிந்து. 9.45 மணிக்கு மேல் மஹா பூர்ணாகுதியுடன் கும்ப புறப்பாடு நிகழ்ச்சி, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி,
மஹா கும்பாபிஷேகம் நடந்தது.அறநிலைய துறை இணை ஆணையர் இளம்பரிதி, உதவி ஆணையர் சபர்மதி, செயல் அலுவலர்கள் ஈஸ்வரமூர்த்தி, சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.