ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை!
ADDED :3925 days ago
வால்பாறை : வால்பாறையில் ஷீரடிசாய்பாபா துவாரகாமாயி தியான மந்திரில் சிறப்பு பஜனை நடந்தது.வால்பாறையில், ஷீரடிசாய்பாபா துவாரகாமாயி தியான மந்திர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது.
இந்த கோவிலில் நாள் தோறும், காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வியாழன் தோறும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு பஜன் பாடல்களும், அலங்கார பூஜையும் நடக்கிறது. இதன்படி நேற்றுமுன்தினம் ஒருங்கிணைப்பாளர் சாய்செல்வரத்தினம் தலைமையில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.