தேவனூரில் கும்பாபிஷேகம்!
ADDED :3926 days ago
அவலூர்பேட்டை: மேல்மலையனூர் ஒன்றியம் தேவனூர் கிராம காலனியில் பாலவிநாயகர், பாலமுருகன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. 13 ம்தேதி காலையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, 108 வகையான ஹோம திரவியங்களில் முதல் கால யாக சாலை பூ ஜையும், இரவு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதலும் நடந்தது.நேற்று காலையில் கோ பூஜை, நாடி சந்தானம், இரண்டாம் கால யாக சாலை பூஜையும் , கடம் புறப்பாடும், கும்பாபிஷேகமும் நடந்தது. அன்னதானம் வழங்கினர். திரளாக கிராம மக்கள் கலந்து கொண்டனர்.