உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழப்பூசய்யன் சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி அன்னதான விழா

பழப்பூசய்யன் சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி அன்னதான விழா

ஈரோடு:சிவகிரி, மாரப்பம்பாளையம், பூலாங்காடு பழப்பூசய்யன் சுவாமி கோவிலில், மகாசிவராத்திரி அன்னதான விழா, இன்று (16ம் தேதி) துவங்குகிறது. இன்று காலை, 7 மணிக்கு துவக்க பூஜை, 10 மணிக்கு காவிரி தீர்த்தம் கொண்டு வர செல்லுதல், மாலை, 4 மணிக்கு கொட்டாட்டத்துடன் தீர்த்தம் கோவிலுக்கு அழைத்து வருதலும் நடக்கிறது. நாளை (17ம் தேதி), மாலை 4.30 மணிக்கு அபிஷேக ஆராதனை, 5.15 மணிக்கு மகா சிவராத்திரி பெரிய பூஜை, மாலை 6 மணிக்கு அன்ன பூஜை, அன்னதானம், இரவு, 8 மணிக்கு சுவாமியின் வெள்ளிக்காசுகள், மோதிரம், கனிகள் ஏலம் விடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !