கோதை காசிவிஸ்வநாதர் கோயில் சிவராத்திரி விழா
ADDED :3929 days ago
நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே கோதைகிராமம் காசிவிஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் கோயிலில் மகா சிவராத்திரி விழா வரும் 17-ம் தேதி நடக்கிறது. காலையில் சிறப்பு பூஜைகளும், பகல் 12 மணிக்கு 16 வகை நறுமண பொருட்கள் அபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. இரவு அபிஷேகத்துக்கு பின்னர் ஜாமபூஜையும், அன்னதானமும் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் ஜாமபூஜை, இரண்டு மணிக்கு மூன்றாம் ஜாமபூஜை, நான்கு மணிக்கு நான்காம் ஜாமபூஜை ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சிவசக்தி மன்றமும், சிவசக்தி நிற்பணி மன்றமும் செய்துள்ளது.