ராமேஸ்வரம் கோயிலுக்கு கங்கை நீருடன் வந்த பக்தர்கள்!
ADDED :4000 days ago
ராமேஸ்வரம் : மாசி சிவராத்திரியையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வட இந்திய பக்தர்கள், கங்கை நீருடன் வந்து சுவாமியை வழிபட்டனர்.
மாசி சிவராத்திரியையொட்டி, நேற்று ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி சன்னதியில் கோயில்
குருக்கள் மந்திரம் முழங்க கங்கை நீரில் அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. இப்பூஜையில் தமிழகம், வட இந்திய பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ராமேஸ்வரம் சீதாராம் தாஸ் பாபா தலைமையில் நூறுக்கு மேற்பட்ட வட இந்திய பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி, நடனமாடி கங்கை நீர் கலசத்தை கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வழிபட்டனர்.