உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லையம்மன் கோவில் திருவிழா!

எல்லையம்மன் கோவில் திருவிழா!

ஆர்.கே.பேட்டை: மேளபூடி தென்னந்தோப்பில் உள்ள எல்லையம்மன் கோவிலில், நேற்று முன்தினம், பொங்கல் திருவிழா நடந்தது.

பள்ளிப்பட்டு அடுத்த, மேளபூடி கிழக்கு பகுதியில், கொற்றலை ஆற்றங்கரையில், தென்னதோப்பில் உள்ளது எல்லையம்மன் கோவில். இந்த அம்மன், அகத்திசின்னா கோத்திரத்தினரின் குலதெய்வமாக வழிபடப்படுகிறது. தை மாதம் பிறந்து ஐந்து திங்கள்கிழமை இங்கு, பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். வேலுார் மாவட்டம், குருவராஜபேட்டையைச் சேர்ந்த பக்தர்கள், நேற்று முன்தினம், தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சந்தனக்காப்பு மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

கோவில் வளாகத்தில், திரளான பெண்கள், பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் செய்தனர். பக்தர்கள், மொட்டை போட்டு, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மாலை 6:00 மணியளவில், உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், வீதியுலா எழுந்தருளினார். பக்தர்கள், இரவு கோவில் வளாகத்தில் தங்கியிருந்து, நேற்று காலை தங்கள் வீடு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !