அங்காளம்மன் கோவில் மயானக் கொள்ளை விழா!
ADDED :3924 days ago
விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம் சின்னப்பா லே-அவுட்டில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் 19ம் ஆண்டு மயானக் கொள்ளை திருவிழா நடந்தது.
நேற்று காலை 7:30 மணிக்கு ஹோமம், கலச அபிஷேகம் நடந்தது. 7:30க்கு பால்குட ஊர்வலம், 9:00 மணிக்கு அங்காள அம்மனுக்கு பாலாபிஷேகம், சந்தன அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். மாலை 4:00 மணிக்கு மயான கொள்ளை, இரவு 7:00 மணிக்கு விநாயகர், அம்மன், வீரபத்திரர் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.