உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!

சின்னசேலம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!

சின்னசேலம்: சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் மாசி மாத முதல் பிரதோஷம் சிறப்பாக நடந்தது. சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு அபிஷேகங்கள் செய்து, மகாதீபாராதனையை குருக்கள் வெங்கடேசன் செய்து வைத்தார்.

உற்சவர் ரிஷப வாகனத்தில் 40 ஆயிரம் ருத்தராட்சங்களால் அலங்கரித்த ரதத்தில் வலம் வந்தார். கூகையூர் பெரியநாயகி உடனான சொர்ணபுரீஸ்வரர் கோவிலிலும், அசல குசலாம்பிகை சமேத பஞ்ச நாதருக்கும், குரால் சிவன் கோவிலிலும், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷம் சிறப்பாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !