உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தலூர் கோவில் மாசி திருவிழா!

சித்தலூர் கோவில் மாசி திருவிழா!

தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.மகா சிவராத்திரி தினமான நேற்று காலை மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் கருவறை புற்றுக்கு மலர் அலங்காரமும் செய்து தீபாராதனைகள் நடந்தது.

இரவு 8 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு சர்வ அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் ஆராதனைகள் நடந்தது. காப்பு கட்டுதலும், கொடியேற்றமும் நடந்தது. தர்மகர்த்தாக்கள் கோவிந்தசாமி, பாஞ்சாலை, கண்ணன், பூசாரிகள் தமிழ்ச்செல்வன், குமார், நராயணன், சங்கர் பூஜைகளை செய்தனர். தினமும் உற்சவர் சிலை திருவீதியுலா, மகாதீபாராதனை நடக்கிறது. வரும் 25ம் தேதி மயானகொள்ளை உற்சவம், 26ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !