பிரம்ம குமாரிகளின் சிவராத்திரி ஊர்வலம்!
ஊட்டி : நீலகிரி மாவட்ட பிரம்ம குமாரிகள் சார்பில், 79வது சிவராத்திரி விழா, ஊட்டி ஆரியாஸ்
ஓட்டல் அரங்கில், நேற்று நடந்தது.
மூத்த உறுப்பினர் ராஜேஸ்வரி, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். ஓய்வு பெற்ற அரசு கூடுதல் முதன்மை செயலர் சுந்தரதேவன் தலைமை வகித்தார். ஊட்டி ராமகிருஷ்ண மடத்தின் ராகவேஷாநந்தா, ஊட்டி கத்தோலிக்க மறை மாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி, ஊட்டி முஸ்லியர் இமான் சுன்னத் ஜமாத்தின் அசரத். டாக்டர் சித்திக், ஊட்டி எஸ்.எஸ்., ஜெயின் சங்கத்தின் தலைவர் நியான்முல், ஊட்டி பயாஸ் பெயித் அமைப்பின் உறுப்பினர் பெரோஸ், ஊட்டி திபெத்தியன் சங்க தலைவர் கர்மா செரிங் ஆகியோர் பேசினர்.முன்னதாக, சிவ ராத்திரியை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது. பின், அனைவரும் மெழுகு வர்த்தி ஏந்தி உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக அமைதி ஊர்வலம் நடந்தது.இதில், ஊட்டி நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.