உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடைமருதூர் கோவில்களில்சிவராத்திரி வழிபாடு கோலாகலம்!

திருவிடைமருதூர் கோவில்களில்சிவராத்திரி வழிபாடு கோலாகலம்!

கும்பகோணம்:திருவிடைமருதூர் வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.திருவிடைமருதூர் வட்டார பகுதியான திருநாகேஸ்வரத்தில், கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத ஸ்வாமி கோவில் உள்ளது. நேற்று காலை, இரண்டாம் கால பூஜையை தொடர்ந்து காலை, 11 மணிக்கு நாகநாத ஸ்வாமிக்கு, 1,008 சங்காபிஷேகமும், தீபராதனையும் நடந்தது. மாலை, 6 மணிக்கு ராகுபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தயிர்பள்ளயம், புஷ்பலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை, உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.

திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்க ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு சிவராத்திரி விழாவையொட்டி, நான்கு கால சிறப்பு வழிபாடுகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும், மருதா நாட்டியாஞ்சலியின், நான்காம் ஆண்டு நிகழ்ச்சியும் நடந்தது.
ஏற்பாடுகளை, கண்காணிப்பாளர் சுவாமிநாதன் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.

திருநாகேஸ்வரம் தேப்பெருமாநல்லூரில் விஸ்வநாத ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு, சிவராத்திரி விழா வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !