உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை!

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை!

கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் விடிய விடிய நடைபெற்ற மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்  செய்தனர். மகா சிவராத்திரியையொட்டி, நேற்று முன்தினம் காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி மற்றும் உற்சவர்  சந்திரசேகருக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து. மாலை துர்கை மற்றும் யுகமுனீஸ்வரருக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் மாலை 5:00, இரவு 8:00,  11:00 நள்ளிரவு 2:00 மற்றும் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு அதிகார நந்தி கோபுர தரிசனத்தைத் தொடர்ந்து உற்சவர் வீதியுலா நடந்தது. சிவராத்திரியை முன்னிட்டு நேற்று  முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை நடைபெற்ற சிறப்பு தரிசனங்களை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவ தொண்டர்கள் நீ ண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு நடந்த நாட்டியாஞ்சலியில், பவானி,  கடலூர் நக்ஷத்ரா, சிவாலயா, அன்னை சுப்பம்மாள், சிவதாண்டவ நாட்டியாலயா பள்ளி உட்பட 8 நாட்டிய பள்ளி மாணவ, மாணவியரின் நாட்டிய  நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வயலின் இசை நிகழ்ச்சியும், புலவர் கலியபெருமாளின் சொற்பொழிவு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !