சென்னை முழுவதும் மகா சிவராத்திரி நகரில் கோலாகலம்!
சென்னை: சென்னை நகர் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்கள், அம்மன் கோவில்கள், விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் கோவில்களில், மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
* பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை முதல், சிறப்பு ஹோமங்கள், ருத்ர மகன்யாசம் உள்ளிட்டவை நடந்தன. கோவில் வழிபாடுகள் அனைத்தும், இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
* பாரிமுனை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று வெள்ளி ரத வீதியுலா நடந்தது.
* சென்னமல்லீஸ்வரர் கோவில், தண்டையார்பேட்டை மற்றும் சவுகார்பேட்டை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.
* கொத்தவால்சாவடி கன்யகாபரமேஸ்வரி கோவிலில் உள்ள மரகத லிங்கத்திற்கு நான்கு கால பூஜை நடந்தது. பக்தர்கள், 1,008 அகல் விளக்குகளாலான சிவலிங்கத்தை வடிவமைத்து, கோவில் முழுக்க விளக்குகளை ஏற்றினர்.
* திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
* மணிமங்கலம் தர்மேஸ்வரர் கோவிலில், ௯,௦௦௮ தீபங்கள் நேற்று ஏற்றப்பட்டன.