நருவலூர் மாரியம்மன் கோவில்பிப்., 23ல் கும்பாபிஷேக விழா!
நாமக்கல்:நருவலூர் மாரியம்மன், விநாயகர் கோவிலில், பிப்ரவரி, 23ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்கிறது.நாமக்கல் அடுத்த நருவலூரில், மாரியம்மன், விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருப்பணிகள் மிகுந்த பொருட்செலவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பிப்ரவரி, 23ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.விழாவை முன்னிட்டு, நாளை (பிப்., 20) இரவு, 11 மணிக்கு பிரவேசவேலியுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. 21ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, மகா கணபதி, மகாலட்சுமி, சரஸ்வதி மற்றும் துர்கா ஹோமம், தீபாராதனை நடக்கிறது.காலை, 10 மணிக்கு காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுத்துவர பக்தர்கள் செல்கின்றனர். மாலை, 3 மணிக்கு, முளைப்பாரிகை, தீர்த்தக்குடம், பசுமாடு, கன்னிப்பெண் அழைத்தல், மாலை, 4 மணிக்கு புண்யாகம், வாஸ்து சாந்தி, முதற்கால யாகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.பிப்ரவரி, 22ம் தேதி காலை, 9 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, விசேஷ சாந்தி, இரண்டாம் காலயாகம், காலை, 10 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், கோபுர கண் திறப்பு, இரவு, 11 மணிக்கு ஸ்வாமி பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.பிப்ரவரி, 23ம் தேதி, அதிகாலை, 4.30 மணிக்கு, பிரம்ம ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம், மூலமந்திர ஹோமம், காலை, 6 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, காலை, 7.30 மணிக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. அதை தொடர்ந்து, ஸ்வாமி தரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.