செல்லியாண்டியம்மன் கோவில் பூச்சாட்டு விழா!
பவானி: பவானி, செல்லியாண்டியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம், மாசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.இந்தாண்டு நேற்று முன்தினம் இரவு, பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, முக்கிய பிரமுகர்கள் மூலம் பவானி, பழனிபுரத்தில் உள்ள பட்டதரசியம்மனுக்கு பூச்சொரிதல் செய்யப்பட்டது. பின், செல்லியாண்டியம்மன் கோவில், மேற்கு தெரு மாரியம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டு விழா நடந்தது. வரும், 24ம் தேதி மாரியம்மனுக்கு கம்பம் நடுதலும், 25ம் தேதி செல்லியாண்டியம்மன் கோவிலில் கொடியேற்றமும், மார்ச், 2ம் தேதி மூலவரான அம்மனுக்கு புனித நீர் ஊற்றுதல், 4ம் தேதி பொங்கல் விழா, 5ம் தேதி தேரோட்டம், கம்பம் எடுத்தல், 6ம் தேதி பரிவேட்டை, 7ம் தேதி தெப்போற்சவம், 8ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவடைகிறது. நேற்று முன்தினம் நடந்த பூச்சாட்டு விழாவில், பக்தர்கள், கட்டளைதாரர்கள், மெரவணைதாரர்கள் பங்கேற்றனர்.