உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரம்பலூர் சிவாலயங்களில் சிவராத்திரி விழா

பெரம்பலூர் சிவாலயங்களில் சிவராத்திரி விழா

பெரம்பலூர் -பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மற்றும் எளம்பலூர் பிரம்மரிஷி மலைக்கோயில் ஆகியவற்றில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சிவராத்திரியை யொட்டி விநாயகர் பூஜை, அனுக்ஞை, புண் யாக வாசனம், கலசபூஜைகளும் நடந்தது. காலை 10.30 மணிக்கு மகா ருத்ரஜபம் பாராயணம் செய்யப்பட்டது. பகல் 11.15 மணிக்கு மூலஸ்தான அபிஷேகம் நடந்தது. 12 மணிக்கு பூர்ணாஹுதியும், மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. பிறகு மாலை 6.30 மணிக்குத் தொடங்கி விடிய விடிய நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டது. ருத்ரஜபம் மற்றும் 4 கால பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர், சஞ்சீவி ஆகியோர் நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன், சிவகாமம் மோட்டார் நிர்வாக இயக்குனர் கலியபெருமாள், கணேசன், வைத்தீஸ்வரன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

*எளம்பலூர்: இதேபோல் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் காகன்னை ஈஸ்வரர் கோயிலில் உலக மக்கள் நலன்கருதி அன்னை சித்தர் ராஜ்குமார் குருஜி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6மணியளவில் மலை மீது சிவஜோதி ஏற்றப்பட்டது. தொடாந்து வான வேடிக்கை நடந்தது. இரவு 10 மணிக்கு, 1 மணிக்கு, 5 மணிக்கு என நான்குகால பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று காலை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, 210 சித்தர்களின் யாக பூஜை ஆகியன நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் டிரஸ்ட் இயக்குநர்கள் ரோகினி, மகாலிங்கம், தவசிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !