பழங்கால அம்மன் சிற்பம் குளத்தில் கண்டெடுப்பு!
ADDED :3891 days ago
வேதாரண்யம்:நாகை மாவட்டம், வேதாரண்யம், நாகை ரோட்டில் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தண்டவராயன்குளம் உள்ளது. இந்த குளத்தில் குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக காணப்பட்டதால் நேற்று காலை, நகராட்சி துப்பரவு பணியாளர்கள் குளத்தில் காணப்பட்ட குப்பை, பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி கொண்டிருந்தனர். அப்போது, அந்த குளத்தில் பழங்காலத்தைச் சேர்ந்த, 2 அடி உயரமுள்ள மரத்தாலான அம்மன் சிற்பத்தை கண்டெடுத்தனர்இதுகுறித்து தகவலறிந்த வேதாரண்யம் எஸ்.ஐ., பக்கிரிசாமி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த அம்மன் சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.