உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிப்., 25ல் துவக்கம்

காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிப்., 25ல் துவக்கம்

குமாரபாளையம்: ளியம்மன் கோவில் தேர்த்திருவிழா, பிப்ரவரி, 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.குமாரபாளையம் ராஜ வீதியில், காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், மாசி மாதம் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது.நேற்று காலை, 9 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனிதநீராடி தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, ஸ்வாமி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பிப்ரவரி, 24ம் தேதி மறுபூச்சாட்டுதல், 25ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது.மார்ச், 3ம் தேதி தேருக்கு கலசம் வைத்தல், 4ம் தேதி குண்டம் இறங்கும் விழா மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச், 5ம் தேதி திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டி வேஷமும், மார்ச், 6ம் தேதி தேர் நிலை அடைதல், வாணவேடிக்கை, இரவு அம்மன் திருவீதி விழா நடக்கிறது. மார்ச், 7ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 8ம் தேதி அம்மன் ஊஞ்சல் விழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !