சின்ன ஓங்காளியம்மன் கோவில் விழா
திருச்செங்கோடு:திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில், மாசி குண்டம் திருவிழா இன்று (பிப்., 20) பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. திருச்செங்கோடு, சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசிக்குண்டம் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி, இன்று (பிப்., 20), பூச்சாட்டுதல் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 27ம் தேதி மாலை அணிந்த பக்தர்கள், மலையடிக் குட்டையில் இருந்து தீர்த்த ஊர்வலம், அம்மன் அழைத்தல் மற்றும் அக்னிகரகம் எடுத்து, சிறப்பு பூஜைகள் நடத்துவர். மார்ச், 1ம்தேதி, 108 சங்கு அபிஷேகம், தீபாராணை நடக்கிறது. 2ம்தேதி பூச்சொரிதல் விழா, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. 3ம் தேதி, குண்டத்து பூஜை, அன்றிரவு மங்கள இசையுடன் ஸ்வாமி திருவீதி உலா, இன்னிசை நிகழ்ச்சியுடன், மகா குண்டம் பெரு விழா நடக்கிறது. 4ம்தேதி பொங்கல் விழா, 7ம் தேதி அம்பாள் நான்கு ரத வீதிகளில் வாணவேடிக்கையுடன், திருவீதி உலா வருகிறார். இதற்காக, சிறப்பு அபிஷேக ஆராதனை, மஞ்சள் நீராட்டுடன் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சாந்தி, செயல்அலுவலர் முத்துசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.