உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரப்பம்பாளையம் அம்மன் கோவிலில் தீர்த்தம் புறப்பாடு!

மாரப்பம்பாளையம் அம்மன் கோவிலில் தீர்த்தம் புறப்பாடு!

பவானி: ஈரோடு மாவட்டம், எலவமலை கிராமம், மாரப்பம்பாளையத்தில், மஹா கணபதி, மஹாசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள் மஹா கும்பாபிஷேகம், வரும், 22ல் நடக்கிறது.இன்று காலை, 7 மணியளவில் காவிரி தீர்த்தம் கொண்டு வர புறப்படுதல். மாலை, 4.30 மணி முதல், தீர்த்த குடங்கள்-முளைப்பாலிகை தட்டங்களை கோவிலுக்கு அழைத்து வருதல் நடக்கிறது. அதற்கு பின், விநாயகர் பூஜை, புண்யாகவாசனை, பஞ்ச பூஜை, வாஸ்து சாந்தி, முளைப்பாலிகை பூஜை, யாக பூஜை துவங்கும்.நாளை, (21ம் தேதி), காலை, 7 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜைகள், மாலை, 5 மணிக்கு மூன்றாவது காலயாக பூஜைகள் துவக்கும். புதிய கற்சிலைகள் கோபுரங்கள் கண் திறப்பு, பிரசாதம் வழங்குல் நடக்கிறது. இரவு, 11.45 முதல், 12.30 மணி வரை சிலை கலைப்பீடத்தில் எழுந்தருள செய்தல் நடக்கிறது.வரும், 22ல், காலை, 5.30 மணிக்கு சக்தி விநாயகர் பூஜை, மாரியம்மனுக்கு கங்கணம் கட்டுதல், நான்காம் காலயாகம் துவக்கம், மண்டப பூஜை, ஸ்பர்ஸ ஆகுதி, மகா பூரணாஹிதி, கும்ப தேவதைகள் மூல ஆலயத்துக்கு புறப்பாடு நடக்கிறது. காலை, 8.15 மஹா கணபதி, மஹாசத்தி மாரியம்மன், மாகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !