உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொதுத்தேர்வு எழுதுவோருக்காக உத்தமர் கோவிலில் சிறப்பு யாகம்!

பொதுத்தேர்வு எழுதுவோருக்காக உத்தமர் கோவிலில் சிறப்பு யாகம்!

திருச்சி: பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் தேர்வில் வெற்றி பெற்று, அதிக மதிப்பெண் பெறுவதற்காக, உத்தமர் கோவிலில், ஞான சரஸ்வதிக்கு, சிறப்பு ஹோமம் நடத்துகின்றனர். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார் கோவிலில், சப்த குரு பரிகார ஷேத்திரம் மற்றும் மும்மூர்த்திகள் தலமாக உத்தமர் கோவில் உள்ளது.இங்கு, ஞான சரஸ்வதி, ஏட்டுச்சுவடி, ஜபமாலையை கையில் ஏந்தியபடி அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், வரும், 22ம் தேதி, பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் தேர்வில் வெற்றி பெற்று, அதிக மதிப்பெண் பெறவேண்டி, ஞான சரஸ்வதிக்கு சிறப்பு ஹோம விழா நடக்கிறது.காலை, 10.30 மணிக்கு, பகவத் பிரார்த்தனை, நவகலச ஆவாஹன, பூர்ணாஹூதி, திருமஞ்சனம், கடம் புறப்பாடு, மஹா தீபாராதனையும், சிறப்பு அர்ச்சனை என, பகல், 1.25 மணி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு ஹோமத்தில், மாணவ, மாணவிகளை கலந்து கொள்ளச்செய்து, ஞான சரஸ்வதியின் அருள் பெற்று, தேர்வில் வெற்றி பெற வேண்டும், என கோவில் உதவி ஆணையர் கண்ணையா தெரிவித்துள்ளார். விழா ஏற்பாடுகளை, சந்திரசேகரன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !