உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜாதக தோஷங்கள் விலக

ஜாதக தோஷங்கள் விலக

ப்ராகார ரூபா ப்ராணேஸீ
ப்ராண சம்ரக்ஷணீ பரா/
ப்ராண சஞ்ஜீவினீ ப்ராச்யா
ப்ராணி; ப்ராணா ப்ரபோதினீ

உள்ளார்ந்த பக்தியோடு, ஒருமுகமாய் துதிப்பவர்களை எப்போதும் காப்பவள் ஸ்ரீகாயத்ரி. காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரி என்பது வாக்கியம். வேதங்களின் தாய் என்று போற்றப்படுபவள். இவளே சகல தேவதா ஸ்வரூபம் என்றும் விவரிக்கின்றன நூல்கள். இந்த ஸ்லோகம். காயத்ரி ஸஹஸ்ரநாமத்தில் இடம் பெற்றுள்ளது. ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைகின்ற இடத்தைப் பொறுத்தே யோகங்கள் அல்லது தோஷங்கள் என்பவை ஏற்படுகின்றன. அவற்றின் விளைவாகவே துன்பங்கள், ஏமாற்றங்கள், தடைகள்... என்று எதிர்படுகின்றன. அதற்குப் பரிகாரமாக. தினமும் காலை, மாலை இருவேளையிலும் நீராடி, தூய உடை அணிந்து இந்தத் துதியை 108 முறை சொல்லி வந்தால், ஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !