சுபிட்சம் ஏற்பட!
ADDED :3888 days ago
பவாய பர்காய பவாத்மஜாய
பஸ்மாய மாநாத்புத விக்ரஹாய
பக்தேஷ்ட காமப்ரதகல்பகாய
பகார ரூபாய நமோ குஹாய
(சரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம்)
சிவசக்தி அம்சமாக வெளிப்பட்டவன். முருகப் பெருமான். ஐம் க்லீம் சவு என்கிற பாலா மந்திரங்களால் பூஜிக்கப்படுபவனும். குழந்தைப் போன்ற தன்மை உடையவனுமான முருகனின் அருளைப் பெற எளிய மந்திரம் இது. மங்கள வடிவினனும் பாவங்களைப் போக்குகிறவனும் பரமசிவனின் மனதுக்குகந்த புத்திரனும் விபூதியைத் தரித்த பேரழகுத் திருவுரு கொண்டவனும் பக்தர்கள் கோரியவற்றை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவனும் ப என்ற (சரவணபவ) அட்சரத்தின் வடிவாய்த் திகழ்பவருமான குஹப்பெருமானே, நமஸ்காரம் என்பது இதன் பொருள்.