உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துன்பம் தொடராதிருக்க!

துன்பம் தொடராதிருக்க!

ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம

கணபதியின் முக்கியமான வடிவங்கள் 32 ஆகும். அதில் 20-வது வடிவத்தின் திருநாமம் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.

அவர் அடர் சிவப்பு நிறத்துடனும். ஆறு திருக்கரங்களுடனும், உச்சியில் பிறை நிலவுடனும், குசப்புல் ஆசனத்துடனும், மூன்றாம் கண்ணுடனும் விளங்கக்கூடிய தேவதா மூர்த்தம். எப்பேர்ப்பட்ட துயரத்தையும் போக்கும் அரிய மந்திரம் இது. கணபதி பீஜாட்சரத்துடன் கூடிய இந்த மந்திரம் வெகு சீக்கிரம் பலனளிக்க வல்லது. தேய்பிறை நான்காம் நாளன்று ஆரம்பித்து, வளர்பிறை நான்காம் பிறை வரையில் 108 முறை மந்திர ஜபத்தினால் பூஜை செய்ய வேண்டும். மொத்தம் 16 நாட்கள் கணக்கு. இந்த மந்திரத்தை எவர் தொடர்ந்து ஜபம் செய்து வருகிறாரோ. அவர் சொல்லுமிடமெல்லாம் துன்பத்தின் நிழல் என்பதே இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !