சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :5230 days ago
தியாகதுருகம் : தியாகதுருகம் காந்திநகரில் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கடந்த 7ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. தினமும் இரவில் மாரியம்மன் சரித்திர பாரத சொற்பொழிவு நடந்தது. கடந்த 17ம் தேதி காத்தவராயன் மோடி எடுத்தல், கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் சிலையை வைத்து சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பேரூராட்சி தலைவர் அருணா மணிமாறன் தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.