உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெ.அகரம் பெருமாள் கோவிலில் ஆனி திருவோண திருமஞ்சனம்

வெ.அகரம் பெருமாள் கோவிலில் ஆனி திருவோண திருமஞ்சனம்

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வெ.அகரம் பெருமாள் கோவிலில் ஆனி திருவோன திருமஞ்சனம் நடந்தது. விழுப்புரம் அடுத்த வெ.அகரம் (வெங்கடாத்ரி அகரம்) கிராமத்திலுள்ள ராஜ லட்சுமி சமேதா நாராயண பெருமாள் கோவிலில் ஆனி திருவோன திருமஞ்சனம் நேற்று நடந்தது. வருஷ திரு நஷத்திரத்தை முன்னிட்டு நடந்த இவ்விழாவில் நேற்று காலை பெருமாளுக்கு கருட வாகன சேவையும், சிறப்பு அலங்கார ஸ்தபன திருமஞ்சனமும் நடந்தது. பின் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பெங்களூரூ, சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !