முருக பக்தர்கள் பால்குட ஊர்வலம்!
ADDED :3930 days ago
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், முருகபக்தர்கள் காவடிக்குழுவின் சார்பில், பழநி பாதயாத்திரையையொட்டி, நேற்று காலை, 7:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து, பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து, காலை, 11:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரபூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பகல், 12.00 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியை கூட்டுறவு நகர வங்கித்தலைவர் அமீது, நகராட்சித்தலைவர் சத்தியவாணிமுத்து, துணைத்தலைவர் மயில்கணேஷ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு ஆகியோர் துவக்கி வைத்தனர்.நாளை மாலை, 3:00 மணிக்கு பழநி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி பாதயாத்திரைக்குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.