சமயபுரம் செல்லும் அய்யலூர் பக்தர்கள்
ADDED :3987 days ago
வடமதுரை: அய்யலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளை ஏராளமான பக்தர்கள், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். தற்போது 26ம் ஆண்டாக இதற்காக காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், பாதயாத்திரை குழு குருசாமி பிச்சை தலைமையில் அய்யலூர் களர்பட்டியில் ஒன்று கூடினர். அய்யலூர் அன்னை மாரியம்மன் கோயிலில் இருந்து 4000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரத்திற்கு புறப்பட்டனர்.