உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் ரோப்கார் நாளை நிறுத்தம்!

பழநியில் ரோப்கார் நாளை நிறுத்தம்!

பழநி:பழநி ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (பிப்.,24) ஒருநாள் மட்டும் நிறுத்தப்பட உள்ளது.பழநிமலைக்கோயிலுக்கு பக்தர்கள் மூன்று நிமிடத்தில் எளிதாக சென்று வரும் வகையில் நாள்தோறும் ரோப்கார் இயக்கப் படுகிறது. மாதாந்திர பராமரிப்பு பணியில் உருளைகள், கம்பிவடக்கயிறு, பெட்டிகளை கழற்றி ஆயில், கிரீஸ் இட உள்ளனர். பின் ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடக்கிறது. அதில் பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்படுகிறது. பின்பு ரோப்கார் பிப்.,25ல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம் போல் இயக்கப்படும், என பழநி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !