உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரை நிர்வாணத்துடன் குறி சொல்லும் மூதாட்டி!

அரை நிர்வாணத்துடன் குறி சொல்லும் மூதாட்டி!

முசிறி: முசிறி அருகே, வேலம்பட்டிபுதுாரில், பெண் ஒருவர், அரை நிர்வாண கோலத்தில் குறி சொல்லி வருகிறார். இவரிடம் குறிகேட்பதற்கு ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே, தாத்தையங்கார்பேட்டை அடுத்து உள்ளது வேலம்பட்டி புதுார் கிராமம். இங்கு, புவனேஸ்வரி என்பவரது வீட்டுக்கு, திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சின்ன குஞ்சம்மாள், 65, என்ற மூதாட்டி வந்துள்ளார்.அரை நிர்வாண கோலத்தில், வேலம்பட்டிபுதுார் கிராமத்தில் சுற்றித் திரியும் சின்ன குஞ்சம்மாள், கண்ணில் படுபவர்களுக்கு, குறி சொல்லி வருகிறார். சுற்று வட்டார கிராம மக்கள், திருமணம் தடை, கடன் பிரச்னைகள் தொடர்பாக, சின்ன குஞ்சம்மாளிடம் தெரிவித்து, நல்வாக்கு கேட்கின்றனர். இவர், குளித்து, 20 ஆண்டுகள் ஆகி விட்டதாகவும், இருப்பினும், அவர் உடலில் எவ்வித துர்நாற்றமும் வீசவில்லை என்றும், அவரிடம் குறி கேட்டு செல்பவர்கள் கூறுகின்றனர். வேலம்பட்டிபுதுாரில், அவருக்காக, குடில் கட்டி தருவதற்கான ஏற்பாடுகளை, சிலர் செய்து வருகின்றனர். தற்போது, முசிறி, திருச்சி, ஸ்ரீரங்கம், எருமப்பட்டி, நாமக்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள், அவரை சந்தித்து நல்வாக்கு கேட்டு செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !