உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் வாகனம் நிறுத்த அடாவடி வசூல்!

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் வாகனம் நிறுத்த அடாவடி வசூல்!

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி சிவராத்திரி திருவிழா வில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் கேட்டு அடாவடி செய்கின்றனர். கட்டண ரசீதில் அலுவலக முத்திரை இல்லை. தொகை கையால் எழுதப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்., 17 ல் துவங்கியது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் இருசக்கர வாகனம், கார்களில் வந்து செல்கின்றனர். இருசக்கர வாகனத்திற்கு ரூ. 20 மற்ற வாகனங்களுக்கு ரூ.25 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூல் செய்து கொள்வதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டது. ஆனால் ஏலம் எடுத்தவர்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.50, கார் ஒன்றுக்கு ரூ.100, லாரிக்கு ரூ.150 என இஷ்டத்திற்கு வசூல் செய்கின்றனர். வாகனங் களில் வரும் பக்தர்கள் ஏன் கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறீர்கள் என்று கேட்டால் மிரட்டப்படுகின்றனர். நுழைவு கட்டண ரசீதில் அலுவலக முத்திரை இல்லை. தொகை அச்சிடப்படாமல் பேனாவால் எழுதப்பட்டுள்ளது. அரசு நிர்ணய தொகைக்கு கூடுதலாக பணம் வசூல் செய்துவரும் ஏலதாரர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். ஆண்டிபட்டியை சேர்ந்த பக்தர் தாமோதரன் கூறுகையில், ""குடும்பத்துடன் சுவாமி கும்பிட வரும் போது இவர்களின் அடாவடி வசூல் மிகவும் வேதனையாக உள்ளது. அதிகாரிகளிடம் கூறினால் யாரும் கண்டு கொள்ளவில்லை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !