உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்!

பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்!

ஜெ.ஊத்துப்பட்டி : நிலக்கோட்டை தாலுகா ஜம்பு துரைகோட்டையில் நடந்த திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஜெ.ஊத்துப்பட்டியில் சென்னப்பன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இங்கு சுந்தரமூர்த்தி, மணி குருக்கள், ஊர் கவுண்டர் லகுமையா, பூசாரி மாலையன் தலைமையில் விழா துவங்கியது. கும்பிடு வாங்குதல், சேவையாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.நள்ளிரவு இரண்டு மணிக்கு சென்னப்பன் ஊத்துக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலையில் வானவெடிகள் அதிர சுவாமி ஊர் வந்தடைந்தார். ஊர் அபிஷேகம் நடந்த பின் கோயில் முன்பாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேர்த்திக்கடன் செய்திருந்த பல பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தனர். மதியம் கருப்பணசாமி கோயிலுக்கும் பொங்கல் வைத்து, கிடா வெட்டும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !