அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி திருவிழா!
ADDED :3928 days ago
கும்மிடிப்பூண்டி: சின்னமலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில், மாசி மாத திருவிழாவின் நிறைவாக, நேற்று சிறப்பு வீதியுலா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அருகே, அய்யர்கண்டிகை கிராமத்தில், சின்னமலையனூர் பகுதியில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில். அந்த கோவிலில், இந்த ஆண்டு மாசி மாத திருவிழாவின் போது, அமாவாசை தினத்தில் இருந்து, ஐந்தாம் நாளான, நேற்று முன்தினம் இரவு, அய்யர்கண்டிகை சுடுகாட்டில் மயான கொள்ளை நடைபெற்றது. அதில், 2,500 பக்தர்கள் கலந்து கொண்டனர். மறுநாளான நேற்று, சிறப்பு மலர் அலங்காரத்தில், அங்காள பரமேஸ்வரி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.