உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை பட்டத்தரசியம்மன் கும்பாபிஷேக விழா!

கோவை பட்டத்தரசியம்மன் கும்பாபிஷேக விழா!

கோவை : வேலாயுதம்பாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அடுத்த வேலாயுதம் பாளையத்தில், இஷ்ட சித்தி விநாயகர், ஸ்ரீபட்டத்தரசியம்மன், அண்ணமார் சுவாமி, சின்னண்ணன், பெரியண்ணன் சுவாமி, கருப்பராய சுவாமி, கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, கல் மண்டபம், கருவறை, சிற்ப சாஸ்திர முறைப்படி திருப்பணிகள் செய்யப்பட்டன. கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 19ல், தீர்த்தக்குட ஊர்வலத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் அதிகாலை 4:30க்கு, 4ம் கால யாக பூஜை, நிறைவேள்வி நடைபெற்றது. காலை 7:45க்கு, யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு, இஷ்ட சித்தி விநாயகர், பட்டத்தரசியம்மன், அண்ணன்மார் உள்ளிட்ட சுவாமிகளின் கோவில் கோபுரங்களுக்கு, வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சார்யார்கள் புனித நீர் ஊற்றினர். தொடர்ந்து, மூலவர் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், தச தானம், தச தரிசனம், மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேகத்தில், பொதுமக்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் வேலாயுதம்பாளையம் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !