உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவிலில் பாலியல் சிற்பங்கள் மீது சிமென்ட் பூச்சு!

அம்மன் கோவிலில் பாலியல் சிற்பங்கள் மீது சிமென்ட் பூச்சு!

ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், கோனேடம்பேட்டை கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் உள்ள பாலியல் சிற்பங்கள் மீது சிமென்ட்  பூச்சு பூசப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொல்லியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம்,  கொளத்துார் ஊராட்சியை சேர்ந்தது, கோனேடம்பேட்டை. அங்கு, நகரி நெடுஞ்சாலையை ஒட்டி, துலுக்காணத்தம்மன், தேசம்மன் கோவில்  உள்ளது.

ஏன் சிற்பங்கள்?: அந்த பகுதியை ஆண்ட, கார்வேட் நகர மன்னர்கள் காலத்தில், இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படும் அந்த கோவில், நுாறு  ஆண்டுகளுக்கு மேல் பழமையானது; தற்போது கிராமத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. கோவிலில், அரிய சிற்பங்கள் எதுவும் இல்லை. எனினும்,   அதன் வெளிப்புற சுவரில், சில பாலியல் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வட்டாரத்தில் உள்ள சிறு கோவில்களில், இதுபோன்ற பாலியல் சி ற்பங்கள் இல்லை. இதுகுறித்து பகுதிவாசிகள் கூறுகையில், ‘மன்னன் மகள் திருமணம் முடிந்தும், இல்லறத்தில் நாட்டம் இல்லாமல் இருந்ததாள்.   அதற்காக, மன்னர் இந்த கோவிலை கட்டி, அதில் பாலியல் சிற்பங்களை செதுக்கி வைத்தார்’ என்றனர். ஆனால், சமீபகாலமாக, அந்த பாலியல் சி ற்பங்கள் மீது சிமென்ட் பூசப்பட்டு, அவை மறைக்கப்பட்டு வருகின்றன. பாலியல் சிற்பங்கள் என்றாலே, அருவருப்பானவை என்ற எண்ணத்தின்  வெளிப்பாடு தான், சிமென்ட் பூச்சு என்பதை மறுப்பதற்கில்லை.

இதுகுறித்து, தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது: இந்தக் காலத்தை போல அந்த காலத்தில், ‘டிவி’, அலைபேசி போன்ற தகவல் தொழில்நுட்ப  சாத்தியங்கள் இல்லை. அதனால், முன்னோர்கள் தங்கள் கருத்துகளை, கோவிலில் சிற்பங்கள் மூலம் வெளிப்படுத்தினர். பாதுகாக்க வேண்டும் பாலி யல் சிற்பங்களை பார்ப்பதன் மூலம், கோவிலுக்கு வரும் அனைவரும், இல்லற இனிமையை புரிந்து கொள்வர் என்ற எண்ணத்தில் தான் முன்÷ னார்கள் அவ்வாறு செய்தனர். அவற்றை பாதுகாக்கா விட்டாலும் பரவாயில்லை; சேதப்படுத்தாமல் இருந்தாலே போதும். அவையும் நம் வரலாறு  தான். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். எனினும், இதுகுறித்து, அறநிலைய துறை அதிகாரிகள், அந்த கோவில் நிர்வாகத்தினருக்கு, எடுத்துரைத்து,  சிற்பங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !