ஆரோக்கியம் விருத்தியாக
ADDED :3872 days ago
ஸ்ரீகண்ட பார்வதீநாததேஜிநீபுரநாயகஆயுர்பலம் ஸ்ரியம் தேஹி ஹர மேபாதகம் ஹரகவுரீ வல்லப காமாரே காளகூடவிஷாஸநமாமுத்தராபதம்போதே:தரிபுரக்நந்தகாந்தககழுத்தில் காளகூட விஷத்தை விருப்பத்துடன் ஏற்றுத்தரித்தவரே நமஸ்காரம். காத்யாயநியான பார்வதியின் கணவரே, திருவீழிமிழலை தலத்தின் நாயகரே. நமஸ்காரம். எனக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை அருள்வீராக. சிவபெருமானே. என் பாவங்களைப் போக்கி என்னைத் தூய்மைப்படுத்துங்கள். கவுரியின் கணவரே. மன்மதனை சாம்பலாக்கியவரே. தான் காளகூட விஷத்தை அருந்தி, பிற அனைவரையும் காப்பாற்றிய சீலரே, நமஸ்காரம், த்ரிபுரஸம்ஹாரம் செய்தருளியவரே. காலகாலனே. என்னை ஆபத்துகளிலிருந்து காத்து அருள்வீராக.(இத்துதியை பிரதோஷ தினங்களில் பாராயணம் செய்து வந்தால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் மென்மேலும் விருத்தியாகும் அனைத்து விதமான பயங்களும் தொலையும்.)