உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பை கோவில் ஏகாதசி விழா துவக்கம்!

செம்பை கோவில் ஏகாதசி விழா துவக்கம்!

பாலக்காடு: பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோவில் ஏகாதசி விழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அண்டலாடி சங்கரன் நம்பூதிரிபாடு தலைமையில் நடந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு 101ம் ஆண்டு செம்பை சங்கீத உற்சவம், பிப்.,27 முதல் மார்ச் 1 வரை நடக்கிறது. கர்நாடக இசை மேதை செம்பை வைத்தியநாத பாகவதரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த உற்சவத்தில் இந்தாண்டும் ஏராளமான இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !