ராகவேந்திரர் அவதார தினவிழா!
ADDED :3914 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் ராகவேந்திரர் தியான மண்டபத்தில் அவதார தினவிழா நடந்தது. காலை 7 மணிக்கு மங்கள இசை யுடன் விழா துவங்கியது. 9 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. 11.00 மணி வரை ஆராதனை, 12.00 மணி வரை நல்லியகோடன் நகர் சீனிவாச பெருமாள் கோவில் நம்மாழ்வார் சபை தலைவர் வேங்கடேச ராமானுஜதாசர் சொற்பொழிவாற்றினார். திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் ஸ்ரீதர் பட்டாச்சாரியர், நாகராஜ் அய்யர், முருக்கேரி சீனுவாச சுவாமிகள் ஆகியோர் பூஜைகளை செய்தனர். இரவு 7.10 மணிக்கு தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை அரிமா ராகவேந்திரா ராமமூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.