காரைக்கால் சோமநாதர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
ADDED :3913 days ago
காரைக்கால்: உலக நன்மை வேண்டி, காரைக்கால் சோமநாதர் கோவிலில் மகா சண்டி ஹோமம் நடந்தது. சோமநாயகி உடனுறை சோமநாதர் கோவிலில், உலக நன்மை வேண்டி, துர்கா வழிபாட்டு மன்றம் சார்பில் 30ம் ஆண்டு மகா சண்டி ஹோமம் நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு, கடந்த 25ம் தேதி காலை மங்கள விநாயகருக்கு அனுக்ஞை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், மகா தீபாராதனை, மாலை நவசக்தி அர்ச்சனை நடந்தது.நேற்று காலை சண்டி ஹோமம் ஆரம்பம், அஷ்ட பைரவ பூஜை, கோ பூஜை, பிரம்மசாரி பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை, சுவாசினி பூஜை நடந்தது. பகல் 12.00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு துர்காம்பிகைக்கு கலச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இன்று காலை விநாயகர், துர்கா, மகாலட்சுமிக்கு பால் அபிஷேகம், மாலை சந்தனக்காப்பு அலங்காரம், திருவிளக்கு பூஜை நடக்கிறது.