பூண்டி கோவிலில் கொடியேற்றம்!
ADDED :3913 days ago
அவிநாசி : திருமுருகன் பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கொடி மரத்தின் முன், விநாயக பெருமான், திருமுருகநாத சுவாமி, சண்முகநாதர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதன்பின், கொடியேற்ற ஹோமம் மற்றும் பூஜைகள் துவங்கின. சிறப்பு வேத மற்றும் திருமுறை பாராயணத்தை, கோவில் சிவாச்சார்யார்கள் மேற்கொண்டனர். மங்கல தீபாராதனையுடன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதன்பின், சுவாமி புறப்பாடு, நான்கு வீதிகளில் நடைபெற்றது.செயல் அலுவலர் சரவணபவன், திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் ராமசாமி, குப்புசாமி மற்றும் கொடியேற்ற கட்டளைதாரர்கள் பங்கேற்றனர்.