உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவில் தரிசன டிக்கெட்டில் முறைகேடு!

திருத்தணி முருகன் கோவில் தரிசன டிக்கெட்டில் முறைகேடு!

திருத்தணி முருகன் கோவிலில், சிறப்பு தரிசன டிக்கெட்டில் முறைகேடு செய்த ஊழியர் ஒருவரை, கோவில் நிர்வாகம், பணி இடைநீக்கம் செய்துள்ளது.திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், விரைவு தரிசனம் செய்ய, கோவில் நிர்வாகம், 25, 50 மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை, மலைக்கோவிலில் விற்கிறது. இந்த நிலையில், 25 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் பரிசோதனை செய்யும் இடத்தில், முறைகேடு நடப்பதாக, கோவில் நிர்வாகத்திற்கு, தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம், தக்கார், இணை ஆணையர் ஆகியோர், 25 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வரிசையில் சோதனை செய்தனர். அப்போது, தரிசன டிக்கெட்டுகளை பரிசோதனை செய்த கடைநிலை ஊழியர் சிவா, 30, என்பவர், பக்தர்களிடம் வாங்கிய டிக்கெட்டுகளை, மீண்டும் வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் விற்று, முறைகேடு செய்தது தெரியவந்தது.அதையடுத்து, சிவா, பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து கோவில் நிர்வாகம், விசாரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !