உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகோபால சுவாமி கோவிலில் தாயார் சிலைக்கு பூஜை துவக்கம்!

ராஜகோபால சுவாமி கோவிலில் தாயார் சிலைக்கு பூஜை துவக்கம்!

விருத்தாசலம்: விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் புதிய தாயார் சிலை தானியத்தில் வைத்து பூஜை துவங்கியது. விருத்தாசலம் தெற்கு  பெரியார் நகர், ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி @காவிலில், தாயாருக்கு (செங்கமலத் தாயார்) தனி சன்னதி இல்லை. அதைத்  தொடர்ந்து, தாயாருக்கு புதிதாக சன்னதி, கண்ணாடி மாளிகை கட்ட தீர்மானிக்கப்பட்டது. திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீரங்கம் நாராயண ஜீ யர் சுவாமிகள், சித்தரக்கூடம் டாக்டர் ரங்காச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், கடந்த மாதம் 26ம் தேதி தாயார் சன்னதிக்கு பூமி பூஜை போடப் பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், மகாபலிபுரத்திலிருந்து கடந்த 20ம் தேதி புதிதாக தாயார் சிலை கொண்டு வரப்பட்டு, கோவிலில்  வைத்து நாலாயிர திவ்யப் பிரபந்தம், சேவா காலம் நடந்தது. நேற்றுடன் சேவா காலம் பூர்த்தியடைந்ததை யடுத்து, தாயார் சிலை தானியத்தில் (நெல்)  வைக்கப்பட்டது. தாயார் சிலைக்கு 48 நாட்கள் பூஜை செய்து, வரும் வைகாசி மாதம் புதிய சன்னதியில் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம்  நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !